மொறட்டுவை தமிழ் இலக்கியமன்றமானது தமிழ் மாணாக்கர் தம் ஆளுமை விருத்தி மற்றும் தமிழ் மக்கள் சார் வளர்ச்சிக்காக அயராது உதவிக் கரங்களை நீட்டும் ஒரு பல்கலைகழக குழுமமாகும் . இலங்கையின் பிரம்மாண்டமான விவாதப் போட்டியான சொற்கணையை இலங்கையின் 25 மாவட்டங்களிலும் நடாத்தும் ஒரே ஒரு தமிழ் குழுமமாக இருப்பது சிறப்பம்சம் ! தமிழ் செல் அரித்துப்போய் முடமாகிய பகுதிகளில் கூட தமிழ் சொல்லால் சொற்கணை கொண்டு தமிழை வாழவைத்த தடயங்கள் இன்று பதிவுகளாக ! நாளை வரலாறுகளாக ! கல்வியா? பொருளா? இன்னோரென்ன உதவிகளா? "நாங்கள் இருக்கிறோம்" என்று வெள்ளம் , மற்றும் நில அதிர்வின் போது தோள் கொடுத்திருக்கிறார்கள் நம் மாணவ நெஞ்சங்கள். நாடு போற்றும் தமிழ் விழாவாம் தமிழருவி தொழில்னுட்பம் அழகு சேர்க்க வருடா வருடம் அரங்கேறுகிறது.
தமிழுக்காய் நாம் ! நமக்கேயான தமிழ் !!